தேர்தலில் மனைவியை போட்டியிட வைக்க முயன்ற தி.மு.க.பிரமுகர் வெட்டிக் கொலை
சென்னையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தி.மு.க. பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 188 வது வார்டு
உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவைக்க ஏற்பாடு செய்து வந்தார்.
இந்த நிலையில் இரவு ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகம் அருகே நிர்வாகிகளுடன் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வம் உயிரிழந்தார். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து தி.மு.க.வினர் மற்றும் செல்வம் ஆதரவாளர்கள் அப்பகுதியில் கூடியதால் அங்கு பதற்றம் நிலவியது.