நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல் - மாநில தேர்தல் ஆணையம் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-01 16:30 GMT
சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கியது. தொடர்ந்து வரும் 4-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு, இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி வார்டுகளில் 440, நகராட்சி வார்டுகளில் 803, பேரூராட்சி வார்டுகளில் 1,320 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்