மாணவி தற்கொலை விவகாரம்: அண்ணாமலை, ஹெச்.ராஜா, குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்..!

தஞ்சை மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2022-01-28 20:23 IST
சென்னை,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

மாணவியை பள்ளி நிர்வாகம் மதமாறக் கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை என்று ஒருதரப்பினரும், ஆனால் விடுதிக் காப்பாளர் திட்டியதால்தான் தற்கொலை என மறுதரப்பினரும் கூறிவருகின்றனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா,குஷ்பூ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், 

தஞ்சாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதமாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பொய்யான பரப்புரை செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பொய்யான தகவல் பரப்பிவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி கனகராஜ் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்