தமிழக பகுதியில் முழு ஊரடங்கு: ஒரு பக்கம் கடை மூடல் மறுபக்கம் கடைகள் திறப்பு - ஆச்சர்யத்துடன் பார்த்து சென்ற மக்கள்..!

திருக்கனூர் கடைவீதியில் ஒருபுறம் புதுச்சேரி பகுதியும், கடை வீதியின் மறுபுறம் தமிழக பகுதியான சித்தலம்பட்டு என்ற ஊரும் உள்ளது.

Update: 2022-01-23 12:31 GMT
திருக்கனூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இன்று மூன்றாவது வாரமாக ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. புதுச்சேரியின் எல்லைப்பகுதியான திருக்கனூர் கடைவீதியில் ஒருபுறம் புதுச்சேரி பகுதியும், கடை வீதியின் மறுபுறம் தமிழக பகுதியான சித்தலம்பட்டு உள்ளது.

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழக பகுதியான சித்தலம்பட்டு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் புதுச்சேரி பகுதியான திருக்கனூரில் வழக்கம் போல அனைத்து கடைகளும் திறந்து இருந்தது. 

தமிழகப் பகுதியில் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் புதுச்சேரி பகுதியில் இறைச்சிக்கடை, மதுக்கடை உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு ஊரில் ஒரு பக்கம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் மறுபக்கம் கடைகள் திறந்து இருந்ததால் வெளியூரிலிருந்து வருபவர்கள் திருக்கனூர் கடைவீதியை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்