தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-12-31 14:37 GMT
சென்னை,

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை பாதிப்பு தினமும் உயர்ந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 46 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகி இருந்தது. 

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதில் 66 பேர் குணமடைந்துள்ளனர். 

இதற்கிடையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு கொரோனான தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் குழு பரவலாக இந்த தொற்று பரவியுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்