கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? முதல்-அமைச்சர் ஆலோசனை
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை,
ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலில், கட்டுபாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
நேற்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பிய கடிதத்தில், சென்னையில் தொடர்ந்து கரோனா அதிகரிப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர்கள் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், இரவுநேர ஊரடங்கு, கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை, பள்ளிகள் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கொரோனா அதிகரிப்பால் கூடுதல் கட்டுப்பாடு என்னென்ன விதிக்கலாம் என ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.