தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை மையம்..!

தமிழகத்தின் 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Update: 2021-12-30 17:52 GMT
கோப்புப்படம்
சென்னை,

சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்