நெல்லை: பாபநாசம் அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை

குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நெல்லை அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-28 11:24 GMT
கோப்புப்படம்
நெல்லை,

தென்காசியில் உள்ள குற்றால அருவியில் வரும் 31.12. 2021 முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று தினங்களுக்கு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு அருவியில் 31.12.2021 முதல் 02.01.2021 வரை  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்