மணப்பாறையில் பயங்கர விபத்து; சரக்கு வேன்-கார் மோதல், 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.;

Update: 2021-12-27 06:25 GMT
வடமதுரை,

மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியகுளத்தில் இருந்து 5 பேர் ஒரு காரில் திருச்சிக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து நேற்று இரவு பெரியகுளம் நோக்கி புறப்பட்டு சென்றனர். அந்த கார் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் சென்ற அன்னக்கொடி மாயன், அஸ்லாம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேல்முருகன், சிவக்குமார், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்