தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் தற்போது 6,629 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2021-12-26 12:48 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,00,284 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,42,826 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 679 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,00,673 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,735 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,629 பேர் கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கோவையில் 89 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 பேர், திருப்பூரில் 40 பேர், ஈரோட்டில் 45 பேர், சேலத்தில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்