ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழக அரசு கேவியட் மனு
ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.;
சென்னை,
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது.
இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை நேற்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில்,அவர் மீது மேலும் ஒரு பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.சாத்துரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் எஸ்.பிக்கு வந்த இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் விவகாரத்தில் புகார் தாரர் விஜய் நல்லதம்பி சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் முன் ஜாமீன் மனு மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜியை தேடுகிறது தமிழக காவல் துறை.
ரூ. 3 கோடி பண மோசடி வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜேந்திர பாலாஜி வழக்கு - கேவியட் மனு தாக்கல் #AIADMK | #RajendraBalajihttps://t.co/xltqX9T8k8
— Thanthi TV (@ThanthiTV) December 24, 2021