2 வயது குழந்தையுடன் தீக்குளித்து தாய் தற்கொலை

திருச்சி அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-12-23 19:59 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி என்ற பிரியா (வயது 25). இவருக்கும், திருச்சியை அடுத்த வண்ணாங்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற சந்துருவுக்கும் (32) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சந்துரு ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர் ஆவார்.

இத்தம்பதிக்கு 2 வயதில் நட்சத்திரா என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குழந்தையுடன் தாய் தற்கொலை

இந்தநிலையில் நேற்று சந்துரு ரேஷன் கடைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தையுடன் பிரியா இருந்தார். அப்போது கதவு மூடப்பட்ட நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.

அதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பிரியா தனது குழந்தையுடன் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். குடும்பத்தகராறில் குழந்தையுடன் பிரியா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சப்-கலெக்டர் விசாரணை

அந்த வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, பிரியா கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். ஆனால், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை.

முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக பிரியா தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. மேலும் இறந்த பிரியாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிந்துஜா நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்தநிலையில் பிரியாவின் உறவினர்கள் ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, பிரியா சாவுக்கு காரணமான அவரது கணவர் சந்துருவை கைதுசெய்ய வேண்டும் என முறையிட்டனர்.

மேலும் செய்திகள்