ஆன்லைன் தேர்வை பயன்படுத்தி சென்னை பல்கலைக்கழக தேர்வில் தில்லுமுல்லு
ஆன்லைன் தேர்வை பயன்படுத்தி ரூ.3 லட்சம் கொடுத்து 117 பேர் பட்டம் பெற முயற்சித்ததாக சென்னை பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் கவுரி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம், ‘1980-1981-ம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறலாம்' என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, பலரும் விண்ணப்பித்தனர். ஆன்லைனிலும் தேர்வு நடந்து முடிந்தது.
அந்தவகையில் தொலைதூர கல்வி படிப்பில் சேர விண்ணப்பிக்காத 117 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியது தற்போது அம்பலமாகி இருக்கிறது. தொலைதூர கல்வி நிறுவனத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி, இந்த மோசடி நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலா ரூ.3 லட்சம்
இந்த மோசடிக்கு உதவியர்கள், இந்த 117 பேருடைய விண்ணப்பங்களையும் பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணம் செலுத்தி, மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்ற வரிசை எண்ணையும் வாங்கி கொடுத்து இருக்கின்றனர். அதன்படி, அவர்கள் அனைவரும் 2020-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
அவ்வாறு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்திடம் கேட்டபோது தான் இவர்களுடைய ஆட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அவர்களின் விவரங்களை கொண்டு பல்கலைக்கழக நெறிமுறையை பின்பற்றி, அவர்கள் படித்து தேர்ச்சி பெற்றதற்கான படிப்புகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தி இருக்கிறார்களா? என்பது குறித்தும், அவர்களின் சேர்க்கை விவரங்கள் குறித்தும் பார்த்தபோது அது தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லாததை கண்டு பல்கலைக்கழக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
பல்கலைக்கழக ஊழியர்கள்
பல்கலைக்கழகத்தில் இருக்கும் சிலரும் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு முறைகேடாக பட்டம் பெற முயற்சித்த ஒவ்வொருவரும் மோசடிக்கு பின்னால் இருப்பவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக முறைகேடாக பட்டம் பெற முயற்சித்த 117 பேரின் பட்டமளிப்பு சான்றிதழை ரத்து செய்யவும், தேர்ச்சி பதிவேட்டில் இருந்து அவர்களின் பெயரை நீக்கவும் தொலைதூர கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக்கழகத்திடம் அனுமதி கோரியிருக்கிறது.
கடும் நடவடிக்கை
தொற்று நோய் காலத்தில் நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் தேர்வை பயன்படுத்தி முறைகேடாக பட்டம் பெற முயற்சித்தவர்கள், இந்த மோசடிக்கு பின்னால் இருப்பவர்கள் பற்றி விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சிண்டிகேட் கூட்டம் நாளை (இன்று) கூடி இதுகுறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. உரிய விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்' என்றார்.