நெய்வேலி ஜெயப்பிரியா நிதி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு
நெய்வேலியில் உள்ள ஜெயப்பிரியா நிதி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட், திரையரங்கம், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், இந்த நிறுவனம் தனது அறக்கட்டளை மூலம் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. இந்த நிறுவனம் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
அதனடிப்படையில் கடந்த 16-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக நெய்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆய்வு பணி
இந்த சோதனையில், நிறுவனத்தின் முக்கிய நபர்களால் ரகசியமாக பராமரிக்கப்படும் கணக்கு புத்தகங்கள், அத்துடன் பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் சான்றுகள் மற்றும் பிற தொடர்புடைய சான்றுகளை ஆய்வு செய்தபோது, சிட் பண்ட் வணிகத்தின் வருமானம் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ரொக்கமாக பெறப்பட்ட வைப்புத்தொகையின் மூலம் உருவாக்கப்பட்ட கணக்கில் வராத பணத்தின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
கணக்கில் வராத பணம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்து உள்ளது. முதல்கட்ட ஆய்வின் அடிப்படையில் கணக்கில் காட்டப்படாத ரூ.250 கோடி மதிப்பில் அசையா சொத்துகள் வாங்கியிருப்பதுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தொகைக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்து உள்ளது. சோதனையில் கணக்கில் வராத ரூ.12 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.