என்ஜினீயரிங் மாணவரின் உடல் கரை ஒதுங்கியது

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது மாயமான என்ஜினீயரிங் மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.

Update: 2021-12-20 16:40 GMT
ஆந்திர மாநிலம் நெல்லூர் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் நீரஜ்ரெட்டி (வயது 19). புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது நண்பர்கள் 6 பேருடன் அரியாங்குப்பத்தை அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு குளிக்க சென்றார். அப்போது எழுந்த ராட்சத அலையில் நீரஜ்ரெட்டி அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து சக நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் தவளக்குப்பம் போலீசார், கடலோர காவல் படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று அவரது உடல் பாரடைஸ் பீச் பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்