உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்துவது ஏன்? அமைச்சர் நாசர் விளக்கம்

ஹலோ எப்.எம்.மில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பேசுகிறார்.

Update: 2021-12-18 17:35 GMT
அதில், ‘ஒமைக்ரான்’ தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு, சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற இருப்பதன் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இதில், எந்த முரண்பாடும் இல்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து தக்க முடிவுகளை அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளிக்கையில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவரின் உழைப்பு அபாரமானது என்றும், மு.க.ஸ்டாலினுக்கு பிறகு மக்கள் மத்தியில் வசீகரமான தலைவராக அவர் உருவெடுத்து உள்ளதால் அமைச்சராவதில் என்ன தவறு? என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும், நாம் தமிழர் சீமான் ஆகியோர் தி.மு.க. மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், பா.ம.க. தி.மு.க. பக்கம் வருமா? முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு அமைச்சர் நாசர் பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்