நாமக்கல்லில் வானில் ஏற்பட்ட பயங்கர சத்தம்..! காரணம் குறித்து கலெக்டர் விளக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் வானில் திடீரென பயங்கர சத்தமும் அதனை தொடர்ந்து லேசான நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-14 18:38 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நண்பகல் 12 மணியளவில் வானில் பயங்கர சத்தம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து லேசான நில அதிர்வும் ஏற்பட, பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து பதறியடித்தபடி வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த பயங்கர சத்தம் நாமக்கல் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

கடந்த 2 வருடங்களில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் இது போல் 15-க்கும் மேற்பட்ட முறை பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீடுகளில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வானில் ஏற்பட்ட பயங்கர சத்தத்திற்கு ‘சூப்பர் சோனிக்’ எனப்படும் போர் விமானம் சென்றதே காரணம் என நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி இங் விளக்கமளித்துள்ளார். 

மேலும் செய்திகள்