கோவை: குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி முதல் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்ததால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைஅளவு குறைந்துள்ளதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்து உள்ளது.
மேலும் அங்கு கொேரானா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுற்றுலா பயணிகள் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அனுமதி கிடைத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.