மகளிர் போலீசில் பெண் போலீஸ் தாக்கப்பட்டார்
வில்லியனூர் மகளிர் போலீசில் பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
வில்லியனூர் மகளிர் போலீசில் பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடும்ப பிரச்சினை
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மனைவி ரஞ்சனி தேவி. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஞ்சனி தேவி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து விசாரிப்பதற்காக தமிழ்செல்வனை போலீசார் அழைத்துள்ளனர்.
பெண் போலீஸ் மீது தாக்குதல்
இதையடுத்து தமிழ்செல்வன் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். மேலும் ரஞ்சனி தேவியும் தனது குழந்தையுடன் வந்தார். அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் லட்சுமி, 2 பேரிடம் விசாரணை நடத்தி எழுதி வாங்கியுள்ளார். அப்போது தமிழ்செல்வன், ரஞ்சனிதேவியிடம் இருந்த குழந்தையை பறிக்க முயன்றார்.
ஆனால் குழந்தையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன், ரஞ்சனி தேவியை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட பெண் போலீஸ் லட்சுமியையும் தாக்கி தள்ளிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பெண் போலீஸ் லட்சுமி கொடுத்த புகாரின் போில் தமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.