“3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்தக் கூடாது” - அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.;
திருச்சி,
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் விருப்பட்டால் 3-வது மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. என்றார். தொடர்ந்து இரு மொழிக் கொள்கைக்கு ஆளுநரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைத்தார்.