சென்னையில் நண்பகலில் திடீர் மழை
சென்னை எழும்பூர் , நுங்கம்பாக்கம், மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது.;
சென்னை,
வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
நவம்பர் மாத இறுதியில் பெய்த கனமழைக்கு பிறகு இந்த மாதம் வடதமிழகத்தில் சற்று மழை குறைந்து வெயில் காணப்பட்டது. கடந்த வாரம் முதல் சென்னையில் அவ்வப் போது சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்று பகல் 12 மணி அளவில் சென்னை எழும்பூர் , நுங்கம்பாக்கம் , சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் காலை முதல் தொடர்ந்த வெயில் சற்று குறைந்தது.