கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கடன்தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்;
கடன்தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர்
புதுவை ரெட்டியார் பாளையம் ஜே.ஜே.நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35) ஆட்டோ டிரைவர்.
இவருக்கு சுகாசினி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். செந்தில்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்துள்ளார். இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு சுகாசினி தனது சொந்த ஊரான செஞ்சி அருகே உள்ள நயம்பாடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்.
உருக்கமான கடிதம்
இந்தநிலையில் செந்தில் குமார் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன் அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கடிதத்தில், என் சாவிற்கு நானே பொறுப்பு, என் சாவுக்கு காரணம் கடன்தொல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நிதி நிறுவனங்களுக்கு தான் ரூ.50 ஆயிரம் கொடுக்கவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சுகாசினி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.