தென்காசியில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசியில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update:2021-11-29 08:01 IST
தென்காசி,

குமரி கடல் மற்று அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தென்காசியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்