தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியவை பின்வருமாறு:-
* 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.
* வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும்
* பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகஓள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்.
* பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.
* பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.
* மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.
* பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது.
* பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
* அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
* ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.