வேளாண் பட்ஜெட்: ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2021-08-14 05:46 GMT
சென்னை

தமிழக சட்டசபை  வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அதன்  முக்கிய அம்சங்கள் வருமாறு;-

ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்

ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை 

பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.

பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.

ரூ. 3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.

என கூறினார்.

மேலும் செய்திகள்