மதுரை ஆதீனம் காலமானார்
சுவாசக்கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் காலமானார்.
மதுரை,
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்தநிலையில் சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ஆதினத்தின் உயிர் பிரிந்தது.
மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதினமும் ஒன்றாகும்.
தான் சரி என்று நினைக்ககூடிய அரசியல், சமூக கருத்துகளையும் முன்வைத்தார் மதுரை ஆதினம். சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். தமிழ்த்தொண்டு, ஆன்மீக தொண்டு மற்றும் சமூக பணிகளில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஈடுபட்டு வந்தார். மதுரை ஆதினத்திற்குரிய 3 கோவில்கள் தஞ்சாவூர்,திருவாரூரில் உள்ளன.