போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. ஆய்வு

சுதந்திர தினத்தையொட்டி விருது வழங்குவதற்காக போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

Update: 2021-08-11 19:07 GMT
சுதந்திர தினத்தையொட்டி விருது வழங்குவதற்காக போலீஸ் நிலையங்களில்   டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
விருது
புதுச்சேரியில்    ஆண்டு தோறும் சுதந்திரதினத்தை முன்னிட்டு புதுவையில் உள்ள போலீஸ் நிலையங்களில் சிறந்த போலீஸ் நிலையத்தை தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் சிறந்த போலீஸ் நிலையம் தேர்வு செய்வதற்காக போலீஸ் டி.ஐ.ஜி.மிலந்த் தும்ப்ரே தலைமையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதிக்‌ஷா கோத்ரா (சட்டம்-ஒழுங்கு), ராகுல் அல்வால் (போக்குவரத்து), காவலர் பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் நிலையங்களில் ஆய்வு
இந்தநிலையில் புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை, ஒதியஞ்சாலை, அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் போலீஸ் டி.ஐ.ஜி.மிலந்த் தும்ப்ரே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது போலீஸ் நிலையங்களில் குற்றப்பதிவேடுகள் பராமரித்தல், குற்றங்கள் தடுத்தல், திருடப்பட்ட பொருட்களை மீட்டல், போலீஸ் நிலையங்களை சுத்தமாக பராமரித்தல் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.
இதேபோல் காரைக்காலில் கோட்டுச்சேரி, டவுன் ஆகிய போலீஸ் நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சிறந்த போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படும்.

மேலும் செய்திகள்