16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;
சென்னை,
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் துணை சபாநாயகராக வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நாளை முறைப்படி பதவியேற்கவுள்ளனர்.