தமிழகத்தில் தாமரை என்றும் மலராது: ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம்
தமிழகத்தில் தாமரை என்றும் மலராது என்று ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மருகளும், சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி பரத நாட்டியம் ஆடும் படத்தை தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் ‘தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே’ என்று பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக தனது புகைப்படத்தை, பாஜகவின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது அபத்தமானது என்று கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் தாமரை என்றும் மலராது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட செம்மொழி கீதத்தில் இடம்பெற்றிருந்த இதுதொடர்பான ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பரதநாட்டியம் ஆடிய புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்தத்தகவல் வைரலானதும் அப்பதிவை தமிழக பா.ஜ.க நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
— srinidhi chidambaram (@srinidhichid) March 30, 2021
Dear @BJP4TamilNadu, we understand 'consent' is a difficult concept for you to understand, but you cannot use Mrs Srinidhi Karti Chidambaram's image without her permission. All you've done is prove that your campaign is full of lies & propaganda. pic.twitter.com/CTYSK9S9Qw
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 30, 2021