தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.
சென்னை,
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடத்த பரிசீலனை நடைபெறுவதாக நேற்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த எந்த முடிவும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக எந்த பரிந்துரையும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவில்லை. தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை ” என்றார்.