விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-12-20 06:56 GMT
சென்னை,

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பல்வேறு சாலை விபத்துகளிலும், நீரில் மூழ்கியும் 19 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் மேலும், 19 நபர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்