முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா காயம்

மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து கார் மீது இரும்பு கம்பியால் தாக்கியதில் காரின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.

Update: 2020-12-19 01:46 GMT
விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் ராமசாமி மற்றும் அவரது மகள் அஞ்சலியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ரமேஷ் ஓட்டினார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து கார் மீது இரும்பு கம்பியால் தாக்கியதில் காரின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.

இதில் சசிகலா புஷ்பா உள்பட 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்