தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.;
சென்னை,
ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 36 மீனவர்களை கைது செய்து, 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களையும், 5 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் நேரடியாக தலையிட்டு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.