சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்ஜீப் பானர்ஜி

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.

Update: 2020-12-16 12:29 GMT
சென்னை,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் மிக பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பணியாற்றி வருகிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பணியாற்றி வரும் ஏ.பி. சாஹி, வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.

இதே போல் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் முறையாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக்கொண்ட பின்னர் நீதிபதிகளின் பதிவி பிரமானம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்