விருதுநகரில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று
விருதுநகரில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
விருதுநகர்,
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன் படி மூன்றாவது நாளாக இன்று விருதுநகர் வந்துள்ளார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டாார்.
இந்த நிலையில் விருதுநகரில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.