சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம் - கமல்ஹாசன்

சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-12-13 07:16 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் பகல் 12.30 மணிக்கு மதுரை வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி மதுரை செல்வதற்காக சென்னை விமான் நிலையம் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறியதாவது:-

மக்களின் வாழ்த்துகளுடன் இன்று பிரசாரத்தைத் துவங்குகிறோம். பல இடங்களில் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் நகரங்களுக்குள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். எங்கள் பிரசாரம் தொடங்கி விட்டதாவே கருதுகிறோம். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய முறையில் செயல்படுவோம்.

புதிய ஒரு சீரமைத்த தமிழகத்தை உருவாக்குவதே எங்கள் தேர்தல் பிரசார நிலைப்பாடாக இருக்கும். தமிழகம் சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அது மக்களுக்கும் தெரியும். மீண்டும் அதை புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை இனி செய்யவேண்டியதை பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் செய்திகள்