தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.;

Update: 2020-12-12 09:35 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே கடந்த 3ந்தேதி உறுதிப்படுத்தினார்.  அவர் வெளியிட்ட செய்தியில், ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல  என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்றிருந்தன.

அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! என்றும் பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை உறுதி செய்துள்ளார்.  இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  இதுவரை வேறு கட்சிகளில் இருந்த அவரது தீவிர ரசிகர்கள் கூட ரஜினிகாந்தின் புதிய கட்சியில் சேரக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்பொழுது, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருகையால் ஒரு புதுமையும் நடக்க போவதில்லை என கூறியுள்ளார்.  ரஜினிகாந்த் கட்சிக்கு அ.தி.மு.க.வினர் செல்லமாட்டார்கள் என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்