வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார்.;

Update: 2020-12-12 03:14 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதார குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

மேலும் செய்திகள்