தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகள் ரத்து; சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இன்று ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.;

Update: 2020-12-11 11:10 GMT
சென்னை,

தமிழக அரசு சுப்பிரமணிய சாமி, செந்தில் பாலாஜி, செல்வகணபதி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்குகளை தொடர்ந்திருந்தது.  இவற்றில் 9 அவதூறு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இன்று ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

முதல் அமைச்சரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே அரசு சார்பில் வழக்கு தொடர முடியும்.  தனிப்பட்ட விமர்சனத்திற்கு, அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடர முடியாது என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்