திருவண்ணாமலையில் குபேரர் கிரிவலம்: கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்
கொரோனா பரவல் காரணமாக 13-ந்தேதி குபேரர் கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் நகரில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். இதில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கத்தை கார்த்திகை மாத சிவராத்திரி அன்று குபேரர் வணங்கிய பின் கிரிவலம் வருவதாகவும், அந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிரிவலம் வருவதற்கு உகந்தநாள் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக 13-ந்தேதி குபேரர் கிரிவலத்தன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் வரவேண்டாம் என்றும், மேலும் அன்றைய தினம் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.