தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் புதிய தலைவராக ஜோதிடர் ஷெல்வீ நியமனம்
தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் புதிய தலைவராக ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக நேற்று அறிவித்தார். அவர் தான் தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை ரஜினி அறிவித்தார். அதன்பின் பா.ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பா.ஜனதா கட்சி தெரிவித்தது.
இந்நிலையில் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் புதிய தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.