தமிழகத்தில் பரவலாக மழை
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
கரையைகடந்த புரெவி புயல் மன்னார்வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் கனமழை காரணமாக புதிய பேருந்துநிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பேருந்து பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னையில் கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கனமழை காரணமாக காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காரைக்காலிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
புரெவி புயல் இலங்கையை கடக்கத் தொடங்கியதும் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய பெய்த பெய்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.