ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு: தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - திமுக எம்.பி. கனிமொழி
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையால் தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை மேற்கொண்டு வரும் கனிமொழி எம்.பி. நேற்று சத்தியமங்கலத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையால் தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தி.மு.க. வாக்கு வங்கியை சிதைக்க வாய்ப்பில்லை. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்று சொல்வது தேர்தலில் தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.