செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்படுகிறது.;
சென்னை,
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையொட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம்ஏரிக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால் ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக முதல்கட்டமாக ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்படுகிறது.
இதையடுத்து குன்றத்தூர், காவலூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.