தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-12-01 14:55 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,83,319 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,722 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,411 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,60,617 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,980 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்