தமிழகத்தில் மேலும் 1,725 பேருக்கு கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 1,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் மேலும் 1,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 497 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 29வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 2,08,668லிருந்து 2,09,187 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 2,384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,30,272-ல் இருந்து 7,32,656 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,772 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 16,765 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மேலும் 62,982 பேருக்கும், இதுவரை 1,08,54,878 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 63,777 மாதிரிகளும், இதுவரை 1,11,36,662 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7,58,191லிருந்து 7,59,916 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.