முதலமைச்சர் பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து

முதலமைச்சர் பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2020-11-14 09:22 GMT
சென்னை,

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14ம் நாள், இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். 

இந்நிலையில் குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். அனைத்து குழந்தை செல்வங்களுக்கும், அவர்களை நாட்டின் வருங்கால தூண்களாக செம்மைப்படுத்தும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்