காற்றழுத்த தாழ்வு நிலை; 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2020-11-12 08:00 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு இடைவெளிவிட்டு மிதமான மழையும் அவ்வபோது கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்