உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒதுக்கீடு
உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு வேளாண் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
கொரோனா தொற்று பாதித்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.
துரைக்கண்ணு மறைவு அடைந்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த வேளாண் துறை பொறுப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பரிந்துரையை ஏற்று கேபி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.