அதிமுகவில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம்: அதிமுக தலைமை அறிவிப்பு
நிர்வாக வசதிக்காக சென்னையை 6 மாவட்டங்களாக பிரித்து புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
நிர்வாக வசதிக்காக சென்னையை 6 புதிதாக மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கழகப் பணிகளை விரைவு படுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் கீழ்கண்டவாறு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பின்வருமாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும் மாவட்ட செயலாளர்களாக கீழ்க் கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப் படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வட சென்னை தெற்கு (கிழக்கு): ராயபுரம், திருவிக நகர்- டி ஜெயக்குமார் (மாவட்ட செயலாளர்)
வட சென்னை தெற்கு (மேற்கு): எழும்பூர், துறைமுகம்- நா.பாலகங்கா
தென் சென்னை வடக்கு (கிழக்கு): சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு- ஆதிராஜாராம்
தென் சென்னை வடக்கு (மேற்கு): தியாகராயநகர், அண்ணாநகர்- தி நகர். சத்யா எம்எல்ஏ
தென் சென்னை தெற்கு (கிழக்கு): மயிலாப்பூர், வேளச்சேரி- எம் கே அசோக்
தென் சென்னை தெற்கு (மேற்கு): விருகம்பாக்கம், சைதாப்பேட்டை- விருகை ரவி எம்எல்ஏ
கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதைய நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.